யாழ்ப்பாணம், செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான,அத்திவாரம் வெட்டும் போதே மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடங்கள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதனால், இப்பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களினால் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com