வாழ்வாதார மேம்பாட்டுக்காகவே உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும், அவற்றை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறான செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிடைக்கின்ற நிவாரணங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நிலைபேறாணதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டத்திலேயே ஆளுநர் இதனை கூறியுள்ளார்.
மாகாணத்தின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு சில பயனாளிகளுக்கு வாழ்வாதார மேப்பாட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை உரியவாறு முன்னெடுக்காத பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கோழிக்கூடு உள்ளிட்ட ஏனையவற்றை மீளப்பெறுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com