கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளை நோக்கிய பயணங்கள் எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 16-17ஆம் திகதிகளில் ஓமானில் நடைபெறும் 08 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
இந்திய பெருங்கடல் மாநாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கான ஒரு முதன்மை ஆலோசனை மன்றமாகும்.
இம்மன்றமானது இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
மாநாட்டின் முதல் நாள் அமர்வில், அமைச்சர் விஜித ஹேரத் கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளை நோக்கிய பயணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதிலுமிருந்து 60 நாடுகள், சர்வதேச அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள்.
அத்துடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com