பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்வியியற் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி, 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ‘புலதிசிய தருனை’ எனும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, புலதிசிபுர கல்விக் கல்லூரியின் இலச்சினையுடன் கூடிய நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும்பிரதமர் நாட்டினார்.
கல்வித்துறை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியின் தரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
கல்வியின் தரம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளதாகவும், எதிர்பார்க்கும் இலக்கை அடைய ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்
இதுவரை நடைமுறையில் இருந்த கல்விச் சீர்திருத்தங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், அறிவும் அளிக்கும் திட்டம் எதுவும் அவற்றில் இருக்கவில்லை எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் ஹரிணி அமசூரிண கண்டுகளித்த்துடன், கல்லூரியின் வசதிகள் குறித்தும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
Link : https://namathulk.com