யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞனும் சமரசமாகியுள்ளனர்.
இரு தரப்பினரும் தாம் பதிவு செய்த முறைப்பாடுகளை நேற்றிரவு வாபஸ் பெற்றுக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நேற்றிரவு இருதரஈபினரும் நேரடியாக சென்று முறைப்பாடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக பொலிசார் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற இரண்டு பேர் அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், ஆத்திரமுற்ற M.P அர்ச்சுனா கைக்கலப்பில் ஈடுபட்டார்.
இதன்போது காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இரு தப்பினாலும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் தொடர்பான CCTV காணொளி வெளியாகியது.
Link : https://namathulk.com