சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைத்தரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகள், புடவைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போக்கு அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அம்பாறை, கல்முனை பகுதியில், சுற்றுலா விசாவில் வருகைத்தந்து நகை வியாபாரத்தில் ஈடுப்பட்ட இந்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடைய அழகச்சாமி தமிழ்ச்செல்வி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர் .
கைது செய்யப்பட்ட இந்திய பெண், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 17ஆம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com