பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது மேலும் 06 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை இலக்கு வைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் பிரிவினைவாத கிளர்ச்சியுடன் போராடி வரும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் பகுதியிலேயே குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கனிம வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் பிராந்தியத்தில் பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com