பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று பங்கேற்றார்.
இதன் ஒரு பகுதியாக, பிரதமர் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, தேசிய கல்வியற் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வித்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண கல்வி நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறியதோடு, பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அதற்கு சாதகமான பதில்களை அளித்திருந்தார்.
இதன் பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழாவிலும் பிரதமருடன் இணைந்து ஆளுநரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com