வட மாகாணத்தில் பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில், 47 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாணத்தை சேர்ந்த 47பாடசாலைளுக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மோகன், பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Link: https://namathulk.com