அம்பாறை, நிந்தவூர் பகுதியில், 8 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூரில் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை செய்பவர்களின் வீடுகள் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய நேற்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, 893,840 ரூபா பணம் என்பன பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com