இந்தியாவின் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்கலாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சன நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவிற்காக பயணித்தவர்களால் டெல்லி ரயில் நிலையத்தில் பாரிய சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Link: https://namathulk.com