எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய பாரதீய ஜனதா கட்சியின் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என இதன்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தை கண்டித்து கருப்பு கொடியை கையில் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் இராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com