இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும் என கொரிய தூதுவர் மியோன் லீ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறையில் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கொரிய அரசாங்கம் நாட்டின் திட்டங்களுக்காக பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும், கொய்கா மற்றும் கொபிஹ் ஆகிய கொரிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புக்களின் ஊடாக நாட்டின் சுகாதார துறைக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையின் ஊடகத்துறை அபிவிருத்திக்காக கொரிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, சதகமான பதிலை அளித்த கொரிய தூதுவர், கொரிய அரசாங்கத்தின் கொபிஹ் நிறுவனத்தின் ஆதரவினால் செயற்படுத்தப்படும் இலங்கையின் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் சேவையை முன்னேற்றும் திட்டம் உட்பட சுகாதார துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்த திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com