குருநாகல், வெல்லாவ மற்றும் மரலுவாவ பகுதிகளில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து சரியான தகவலை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
வெல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி T56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெல்லாவ பொலிசார் மற்றும் குருநாகல் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரிவு பொறுப்பதிகாரி, குருநாகல் – 071 8591244
பொலிஸ் ஊடக பிரிவு – 071 8591882
மேலும், குறித்த விடயம் தொடர்பில் தகவல் அளிப்பவரின் பெயர் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com