அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் வேலைத்திட்டம் திருகோணமலை, மூதூர்-ஹபீப் நகர் கடற்கரையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலையில் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில், மூதூரிலுள்ள கடற்கரை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 12.5 கிலோ மீற்றர் தூரமுள்ள கடற்கரை சுத்தம் செய்யப்படவுள்ளது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகம், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, முப்படையினர், கடற்றொழில் திணைக்களம், பிரதேச சமூக அமைப்புக்கள் என மூதூர் பிரதேசத்திலுள்ள சகல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மூதூர் பிரதேச சபையின் செயலாளர், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Link: https://namathulk.com