எதிர்காலத்தில், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர், நேற்று மானிப்பாயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
பெண்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், 22 பெண் உறுப்பினர்களில் 20 பேர் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
Link: https://namathulk.com