அம்பாறை, பெரியநீலாவணை பகுதியில், இரண்டு தடவைகள் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டங்களையும் நடாத்தியும், அவற்றை மீறி கடந்த 11ஆம் திகதி மதுபானசாலையொன்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மூன்றாவது நாளாக, இன்று போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினரகளான இரா.சாணக்கியன் மற்றும் க.கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், போராட்ட களத்திற்கு விஜயம் செய்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.





Link: https://namathulk.com