மியன்மார் சைபர் குற்ற தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்டோர் மீட்பு

Aarani Editor
0 Min Read
மியன்மார்

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

221 ஆண்களும், 39 பெண்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, கானா, தான்சானியா, நைஜீரியா , நேபாளம், உகண்டா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 20 நாடுகளை சேர்ந்தவர்களே மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தாய்லாந்துக்கு அழைத்து சென்று சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *