வாழும்போதே வாழ்த்துவோம் – பசுமையை நேசிப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட கௌரவிப்பு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
ஊடகப் பணியூடாக சமூகசேவையில் அர்பணிப்பணிப்புடன் சேவையாற்றியமைக்கான Man of Nation-2025 என்னும் உயரிய விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்வளவு உயரிய விருதுக்கு சொந்தக்காரனான
ஊடகவியலாளர் யார் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது
யாழ் மாவட்டத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது ஊடகப் பணியை மேற்கொண்டு, தனது சமூகம் சார் நலனுக்காக இவர் பாடுபட்டுள்ளார்.
சமூகம், இனம் , மொழி பற்றுக்கொண்ட ஊடகவியலாளர், தனது எழுத்தின் ஊடாக சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.
2002 ஆம் ஆண்டு அச்சு ஊடகம் ஊடாக தனது பயணத்தை ஆரம்பித்த இவர், அச்சு, இலத்திரனியல், சமூக ஊடகம் என அனைத்து தளத்தில் நின்று தனது சேவையை முன்னெடுத்து வருகின்றார்.
ஊடகம் என்பது வெறுமனே செய்தியை மாத்திரம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாது, மக்களின் வாழ்வியலை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
இந்த கருத்தை ஆணித்தனமாக நிரூபிக்கும் வகையில் தனது ஊடகப் பயணத்தை மேற்கொண்ட இந்த ஊடகவியலாளர், வாழும் போதே வாழ்த்தப்பட்டமை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கௌரவமே.
இத்தனை பெருமைக்கும் உரிய நபருக்கு , இன்ரநஷினல் ஹியூமன் ரைற்ஸ் குளோபல் மிஷன் (International human rights global mission) அமைப்பின் இந்த வருடத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணன் தனதாக்கி கொண்டுள்ளார்.
இவரை போன்ற ஊடகவியலாளர்களை கௌரவிப்பதென்பது பெருமையே.
Man of Nation-2025 என்ற உயரிய விருதைப் பெற்ற ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணன் அவர்களுக்கு நமது TV இன் வாழ்த்துக்கள்.



Link: https://namathulk.com