நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும் – கடற்றொழில் அமைச்சர்

Aarani Editor
2 Min Read
கடற்றொழில் அமைச்சர்

தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டமானது, சூழல் நிலைப்பேறானத்தன்மையை மேம்படுத்தல், விரயங்களை குறைத்தல் மற்றும் ஒழுக்க விழுமியங்களை வலுப்படுத்தல் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகும்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உடல்,உள ரீதியான ஆரோக்கியமான பிரஜையாவதற்குத் தேவையான பலத்தை வழங்குவதும், ஒழுக்க விழுமிய பொறுப்புக்களுக்கு தோள் கொடுக்க கூடிய நற்பிரஜைகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இடுவதனை பிரதான நோக்கமாக கொண்டு, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்றொழி்லாளர்களுக்கும் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், கடலட்டை பண்ணை சார்ந்த முறைக்கேடுகள், வரவு செலவுத்திட்டம் மற்றும் இலங்கை இந்திய மீன பிரச்சினை சார்ந்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு வழங்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

மேலும், முறைகேடுகள் நடந்திருக்கிருக்கின்றமையினாலேயே, அதனை தற்போது வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றோம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு இலஞ்சம் வழங்க தேவையில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்னார்.

மேலும், இன்று வரவு செலவு திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தை நோக்கி நிதி பாய்ச்சலை செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், விசேட நிதி ஒதிக்கீட்டில் குறிகாட்டுவான் இறங்குதுறையை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும், கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை இன்று பாரிய பேசு பேசுப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், இந்தியா மீனவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீற வேண்டாம் எனவும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *