வடக்கு மாகாணத்தில் காணப்படும் சிறு வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்க 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் காணப்படும் சிறு வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது, 5000 மில்லியன் ரூபா நிதி போதும் எனவும், அதைவிட அதிக நிதி தேவை இல்லை என அதிகாரிகள் கூறியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட ஒதுக்கீடுக்கு மேலதிக நிதி தேவையாயின் தருவதற்கு தயார் என தாம் கூறியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com