அமெரிக்க விமானங்கள் விபத்துக்குள்ளாகுவது அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்காவை தாண்டி அந்நாட்டுக்கு சொந்தமான விமானமொன்று நேற்று விபத்துக்குள்ளகியுள்ளது.
கனடாவின் டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் விமான ஊழியர்கள் அடங்கலாக 80 பேர் பயனித்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்ட போது செங்குத்தாக வீழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் நிலவும் கடும் பனி காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் இருந்த 76 பயணிகளில் 22 பேர் கனேடியர்கள் எனவும் ஏனையவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com