இந்தியாவின், அத்துமீறிய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா இதனை பயன்படுத்தி இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் நடந்துக்கொள்ள இடமளிக்க மாட்டோம் என யாழ் கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, கடந்த வாரம் சீன தூதர அதிகாரிகளை சந்தித்த யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இந்திய இழுவை படகு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க, தூதரக அதிகாரிகளும் இதற்கு சாதகமான பதில்களையே வழங்கியிருந்தனர் எனவும் கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கூறினார்.
இந்நிலையில், சீனா இலங்கை மீனவர்களுக்கு உதவி வழங்குவதாக கூறி, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் நடந்துக்கொள்ளுமாயின், அதனை அனுமதிக்க முடியாது என கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com