தற்போது நிலவும் வறட்சியான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் 28 செல்சியஸாக காணப்பட்ட வெப்பநிலை இன்று 31 செல்சியஸாக உயர்வடைந்துள்ளது.
இந்த அதிக வெப்பநிலை மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிப்பதாக அமைந்துள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையில் உடல்நிலை அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது வறட்சியான வானிலை நிலவுவதால் ஏற்படும் அதிகூடிய வெப்பநிலை நீரிழப்பை ஏற்படுத்தும் என இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் உடலிலுள்ள நீரின் அளவு குறைந்து, சோர்வு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படும் என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அதிகப்படியான திரவ உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமாக இதிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியுமென மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Link : https://namathulk.com