கண்டி நகரை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற தீர்மானம்.

Aarani Editor
1 Min Read
கண்டி

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

‘மலை நாட்டின் புகழ்பெற்ற தலைநகரம்’ எனும் பெருமைமிக்க கண்டி நகரில் சமய, வரலாற்று மற்றும் கலாச்சார உரிமைகள் பரவலாக உள்வாங்கப்படும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கண்டி மாநகர சபை உட்பட உள்ளுராட்சி நிறுவனங்கள் 15 ஐ மையப்படுத்தியதாக 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

168 உத்தேச திட்டங்களில் 13 திட்டங்கள் கண்டி நகரத்தில் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு பொது வாகன தரிப்படங்களை நிர்மாணிப்பதுடன் குளம் மற்றும் சிங்க ரெஜிமேந்து வளாகங்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் பொது போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள் இரண்டை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.

பல்நோக்கு போக்குவரத்து வாகனத் தரிப்பிடம் அமைத்தல், ஹிருஸ்ஸகல சந்திக்கு அண்மையிலிருந்து வில்லியம் கொபல்லாவ மாவத்தை ஊடாக வைத்தியசாலை சந்தி வரையான வீதி அபிவிருத்தி, மஹிய்யாவை சுரங்கப்பாதை நிர்மாணம், குடாரத்வத்த வீதி மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தை அபிவிருத்தி, தென்னேகும்புறயிலிருந்து தர்மராஜ வித்தியாலயம் வரையான பிரதான வீதி ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *