மன்னாரில் கனியமணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் நடாத்த திட்டமிட்ட சட்டத்தரணி, அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 பேருக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த மன்னார் நீதவான் பல்வேறு நிபந்தனைகளுடன் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரண்டு தடவைகள் மன்னார் மாவட்டத்துக்கு சென்ற போது , மக்களின் ஒன்றிணைந்த எதிர்பினால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பியனுப்பப்பட்டனர்
மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி ஆகிய பகுதிகளில் மீண்டும் ஆய்வுகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக பொது மக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போராட்டகாரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் பொலிசார் தடையுத்தரவினை பெற்றுள்ளனர்
குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராட்டம் மேற்கொள்ளலாம் எனவும் பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்த கூடாது எனவும் மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Link : https://namathulk.com