காசாவில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பதற்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய 290 லொறிகள் பயணித்துள்ளன.
ரஃபா எல்லையில் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறித்த வாகனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 23 வாகனங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காசாவின் மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பான மாநாடு குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காசாவில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, மீள்கட்டுமான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகளின் சர்வதேச பங்காளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் எகிப்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
Link : https://namathulk.com