புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பம்.

Aarani Editor
2 Min Read
கன்னி வரவு செலவுத் திட்டம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் , புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரச ,தனியார் துறையினருக்கான பல சலுகைகள் தொடர்பிலும், நாட்டின் அபிவிருத்திக்கான முதலீடுகள் குறித்தும் ஜனாதிபதியால் தெளிவுப்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி தனித்தனியாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் நேற்று சமர்பிக்கப்பட்ட
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் என்ன என்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட வேண்டியுள்ளது.

2025 வரவு செலவுத் திட்டம் முன்மொழிவுகள்

சுங்கச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள்.

பொருளாதார மாற்றம் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள்.

பொது தனியார் கூட்டுறவுக்கான புதிய சட்டம்.

வேயங்கொடைக்கு ஒரு உள்நாட்டு கொள்கலன் முற்றம்.

இலங்கை டிஜிட்டல் யுனிக் டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை.

இலங்கை பொருளாதார அதிகார சபையை ஸ்தாபிக்க நடவடிக்கை.

ஜப்பானிய உதவியின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை.

பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான குழுவை ஸ்தாபிக்க தீர்மானம்.

அரசுக்கு சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலம் விடப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் அல்லது வாகன உரிமங்கள் வழங்கப்படுவதில்லை.

திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்தி திட்டம்.

கோதுமை சந்தைப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு.

இயற்கை மற்றும் வனவிலங்கு சேதத்தால் ஏற்படும் இறப்பு மற்றும் அங்கவீனம் ஆகியவற்றுக்கான இழப்பீடு 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு .

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி, கடன் திட்டம்.

பண்டிகைக் காலத்துக்காக லங்கா சதொச ஊடாக உணவுப் பொதி.

புதிய பஸ் நிறுவனம் அமைக்க நடவடிக்கை.

தனியார் மற்றும் உள்ளூர் பேருந்துகள் ஒருங்கிணைந்த அட்டவணையின் கீழ் இயக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு திறைசேரியில் இருந்து அன்றாட நடவடிக்கைகளுக்கு பணம் வழங்காதிருக்க தீர்மானம்.

அரசு ஊழியர் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15,750 உயர்த்தப்படும்.

அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக 15,750 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை.

வரும் ஏப்ரல் முதல் தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ. 27,000 வரை வழங்கப்பட வேண்டும் என முன்மொழிவு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வழங்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *