கடந்த 09ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்சார விநியோக தடைக் காரணமாக முழு இலங்கையும் இருளில் மூழ்கியது.
இதனால், நாடு முழுதும் பல செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்ததோடு, பொதுமக்களும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகினர்.
பாணந்துறை உப மின்நிலையத்தில் குரங்கு பாய்ந்ததால் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக மின்சக்தி அமைச்சு முதலில் தெரிவித்தது .
இதனை தொடர்ந்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயழிழந்து போனதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதிலும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இதனை கருத்திற் கொண்டு இலங்கை மின்சார சபை தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த ஒன்பதாம் திகதி ஏற்பட்ட மின் தடையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இலங்கை மின்சார சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
Link : https://namathulk.com