யாழ்ப்பாணம் A-9 வீதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிப்பதால் விபத்துக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
நகரை அண்மித்த பகுதிகளுக்கு வேக கட்டுப்பாட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதனை சாரதிகள் பொருட்படுத்துவதில்லை.
இதனால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் ஏராளம் .
குறிப்பாக யாழ் நகரை நோக்கி பயணிக்கும் டிப்பர் மற்றும் கனரக வாகனங்கள் வேகம் தொடர்பில் சிந்தித்து பயணிப்பதில்லை என மக்களும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையிலேயே யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தும் அமைந்துள்ளது.
அரியாலை , மாம்பழம் சந்தியில் டிப்பர் மோதி சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார் .
55 வயதான ஆண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com