2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு பாரிய முதலீடு

Aarani Editor
2 Min Read
கல்விக்கு பாரிய முதலீடு

புதிய அரசாங்கம் பதிவியேற்று அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் , சுகாதாரம் என அனைத்து துறைசார்ந்த சீர்த்திருத்தங்களையும் ‘க்ளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக செய்து வருகின்றது.

அதில், கல்வித்துறையும் ஒன்றாகும். குறிப்பாக பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலுமே அரசாங்கத்தினால் பல்வேறுப்பட்ட சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம்.

இதன்படி, சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு செலவுத் திட்டம் நேற்று நிதியமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டது.

இன்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாரளுமன்றதில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாதக கல்வித்துறைக்கென்று பெருமலவிலான நிதி முதலிடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு:

01.முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேளை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

02.தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

03.முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

04.பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.

05.தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

06.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

07.விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5000 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.

08.பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5000 இலிருந்து ரூபா 7500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4000 இலிருந்து ரூபா 6500 ஆக அதிகரிக்கவும் 4600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

09.உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

10.யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

11.ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *