கொழும்பு புதுக்கடை 05 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமன்ரத்ன என்ற சந்தேகநபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கனேமுல்ல சஞ்ஜீவ என்பவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த ஒருவர் என பொலிசார் தெரிவித்தனர்.
சட்டத்தரணியை போல நீதிமன்றத்திற்குள் சென்ற ஒருவராலே துப்பாக்கிப்பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடாத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com