ஒழுக்க விழுமியமுள்ள நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடைய பெண் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரினால் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் அடிப்டையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ஜஸ்,ஹெரோயின்,புகையிலை, போன்ற போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையில் கண்டி, கொழும்பு, களுத்துறை, அம்பலாந்தோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து 217 கிராம் ஐஸ், 12 கிராம் ஹெரோயின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com