யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரால் கடந்த சில நாட்களாக தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
கொழும்பில் நீதிமன்றத்திற்குள் இன்று நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தை சுட்டிக்காட்டிய அவர், பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலைக் காணப்படுவதாக கூறினார்.
பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் தாம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும், அங்கு தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதனை கருத்திற்க் கொண்டு, பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் தனக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Link : https://namathulk.com