அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை, கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டு, இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
மல்வத்தை, கணபதிபுரம் கிராமத்தில் சட்டவிரோத மதுபானத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால், குடும்ப மோதல்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் இராணுவ அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.
இவ்விடயம் தொடர்பில், சம்மாந்துறை பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது, இந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
Link : https://namathulk.com