கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரை கைது செய்ய பொலிசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட நபருக்கு உதவி புரிந்த குற்றத்தின் அடிப்படையில் குறித்த யுவதி தேடப்பட்டு வருகின்றார்.
25 வயதான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற யுவதியே சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.
தகவல் தெரிந்தோர் கீழ்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
0718591727
0718591735
Link : https://namathulk.com