பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 25 வயதான் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் நீதிமன்ற கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உடந்தையாக செயற்பட்ட பெண்ணுடன் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com