கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிப்பிரயோகம் நடாத்திய நபர் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
அத்துடன் குறித்த சந்தேகநபருக்கு உதவி புரிந்த பெண் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான பெண் நாட்டிலிருந்து தப்பி செல்லாதிருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் புத்தளம் பாலாவி பகுதியில் நேற்றுமாலை கைது செய்யப்பட்ட மொஹமத் அசாம் சப்ரிடீன் என்ற சந்தேகநபரிடமிருந்து தொழில் ரீதியான பல அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
இவர் இராணுவத்தில் லெப்டினன் தரத்தில் பதவி வகித்துள்ளார்.
சந்தேகநபர் சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றுமுதல் சட்டத்தரணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தேயே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான கனேமுல்ல சஞ்சீவ அண்மையில் நாடுகடத்தப்பட்ட நிலையில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் .
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.
Link : https://namathulk.com