சூரிய சக்தி மின் உற்பத்தியை கட்டுப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நிறுத்தவோ எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, சூரிய சக்தி மின் உற்பத்தியை குறைப்பது தொடர்பில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அரசாங்கம் முன்வைத்துள்ள நிலையில், சூரிய சக்தி மின் உற்பத்தி மிகவும் அவசியமானது என எரிசக்தி அமைச்சர் கூறினார்.
அத்துடன், தற்போதுள்ள நிலைமையை மேம்படுத்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய எரிசக்தி அமைச்சர், எரிசக்தி கொள்கையின்படி தேசிய மின் கட்டமைப்பில் 2,000 மெகாவாட் விரைவில் சேர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான பிராச்சாரங்களை நம்பவேண்டாம் எனவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அறிவுறுத்தினார்.
Link : https://namathulk.com