கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து பாதுகாப்பு நிலைக்குறித்து பாரிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதென நேற்று பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித சிக்கலும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதாள உலகக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே நேற்று இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com