விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தேசிய கொள்கை அமைப்பதன் தேவையை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன வலியுறுத்தினார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கிராமத்திற்கு தொழில்நுட்பத்தை கொண்டுசெல்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கிராமத்திற்கு தொழில்நுட்பம் கொண்டுசெல்வது பிரதானமாக நிறைவேற்று அதிகாரிகள் மூலமாக இடம்பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டதுடன், நிறைவேற்று அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் இருக்கும்போது அதற்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு நிறைவேற்று அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
Link : https://namathulk.com