யாழ் பிராந்திய முன்னாள் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் லலித் ஜெயசிங்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல்நீதிமன்றத்தால் இன்று சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்த குற்றச்சாட்டில் லலித் ஜெயசிங்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
படுகொலை நடைபெற்று சில தினங்களில் குற்றவாளியான சுவிஸ் குமாரை கிராம மக்கள் மடக்கி பிடித்து வைத்திருந்த நிலையில், அவர் தப்பி செல்வதற்கு யாழ் பிராந்திய முன்னாள் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் லலித் ஜெயசிங்க உதவி புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் இன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற வித்தியா படுகொலையானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Link : https://namathulk.com