மஹா ஓயா நிரேந்துப் பகுதியில் முன்னெடுக்கப்படும் இலங்கையின் முதலாவது நீர் மின்கல திட்டம் சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த புதிய செயல் திட்டத்தின் ஊடாக சூரிய, காற்றாலை சக்திகளில் இருந்து மின்சாரத்தை பெற்று சேமிக்க முடியும் என இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்கட்டமைப்பில் 70% மீள் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஆற்றல் வலுப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி ஆகிய இரு பகுதிகளையும் மையப்படுத்தி அமைக்கப்படும் இந்த திட்டம், சுரங்கப் பாதையில் நீர்த்தேக்கத்தை இணைத்து மின்கலமாக செயற்படுத்தப்படவுள்ளது.
Link : https://namathulk.com