கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 24 மணித்தியால சேவை தொடர்பில் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வோரின் தொகை சடுதியாக அதிகரித்தமையால் அவற்றை விநியோகிப்பதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டது.
ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் அடிப்படையில் கடவுச்சீட்டு விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற காலம் மாறி, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையில் நிற்கும் காலம் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு வழங்கும் முகமாக 24 மணித்தியால சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் 24 மணித்தியால சேவைக்கான கடமைகள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புக்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய திங்கள் முதல் வெள்ளிவரை காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அன்றைய தினத்திற்குள்ளேயே கடவுச் சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com