மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கனிய மணல் அகழ்விற்கு எதிராக தொடர் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் கோரிக்கை அடங்கிய அவசர கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் மக்கள் சக்தி வலிமையானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனவும் கூறியுள்ளனர்.
ஆகவே கோரிக்கையை புரிந்து கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று வெள்ளிக்கிழமை(21)அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.https://namathulk.com