கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் உடல், பொரளை பொது மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பொரளையிலுள்ள தனியார் மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடல் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி உள்ளிட்ட உறவினர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுட்டுக்கொலை செய்யப்பட கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை அவரின் தாயார் நேற்று பொறுப்பேற்றதுடன், சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com