நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடாத்திய துப்பாக்கிதாரியின் காதலி என கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக நாட்டில் பாரிய பேசு பொருளாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் காணப்படுகிறது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பெண் ஒருவரை தேடும் பணியில் பொலிசார் மும்முறமாக ஈடுபட்டு வந்தனர்.
குறித்தப் பெண்ணும் சட்டத்தரணி போல நீதிமன்ற வளாகத்திற்குள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டும் குறித்த பெண் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் துப்பாக்கிதாரியின் காதலி எனக் கூறப்படும் பெண், கொழும்பு மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறினர்.
ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்று இருந்தது.
பாதாள உலகக் குழுவினரிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய முறுகல் நிலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்புலத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் உடல் இன்று பிற்பகல் கொழும்பு பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Link: https://namathulk.com