பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது தேசிய பாதுகாப்பு, சமகால சம்பவங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு குழுவின் அங்கத்தவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு , கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.
மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, புதூர் , தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடம் அடங்களாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமித்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
Link : https://namathulk.com