யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் குறித்த மனிதபுதை குழி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
மின்தகன எரியூட்டி அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பின்னர் மயானத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டன.
குறித்த பகுதியை அண்மித்து 2011 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மனித புதைகுழி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com