பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை சபாநாயகர ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகள் தொடர்பிலும், அவரின் நடத்தை குறித்தும் ஆராயுமாறு குறித்த குழுவிற்கு சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை தம்மிடம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சபாநாயகர் , குறித்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமை குழுக்களிடம் சமர்பிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை தமக்கு பாதுகாப்பு தேவை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ச்சியாக விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, அதனை பதில் பொலிஸ் மா அதிபரிடம் அனுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com